அதி தீவிர புயலாக மாறியது அம்பன்

அதி தீவிர புயலாக மாறியது அம்பன்

தெற்கு வங்கக்கடலில் அதி தீவிர புயலாக இருந்த அம்பன் அதிஉச்ச தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

சென்னை:

வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவானது. இந்த புயலுக்கு ‘அம்பன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. அம்பன் புயல் தற்போது தெற்கு வங்கக்கடலில் அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

புயல் வடகிழக்கு திசை நோக்கி நகரும் என்றும் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

மேலும் அம்பன் புயலால் கடல் சீற்றத்துடனும், இடை இடையே அதி சீற்றத்துடனும் காணப்படும் என்று சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan