ஜூன் 1-ந்தேதி முதல் பயணிகள் தொடர் வண்டிகள் இயக்கம்: பியூஷ் கோயல் அறிவிப்பு

ஜூன் 1-ந்தேதி முதல் பயணிகள் தொடர் வண்டிகள் இயக்கம்: பியூஷ் கோயல் அறிவிப்பு

நாடு முழுவதும் ஏ.சி. அல்லாத 200 ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

நாடு முழுவதும் ஏ.சி. அல்லாத 200 ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து பயணிகள் ரெயில் சேவையை இந்திய ரெயில்வேத்துறை நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 12-ந்தேதியில் இருந்து சிறப்பு ரெயில்களை மட்டும் இயக்கி வருகிறது.

இந்தியாவில் 4-வது கட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து ஏ.சி. அல்லாத 200 ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். வழக்கமான கால அட்டவணைபடி ரெயில்கள் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan