உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக ஹர்ஷ வர்தன் தேர்வு

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக ஹர்ஷ வர்தன் தேர்வு

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தேர்வு செய்யப்பட்டார்.

புதுடெல்லி:

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக பதவ் வகித்து வருபவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோகி நகாடானி. இந்த குழுவில் சுமார் 34  நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் சபையில் உலக சுகாதார அமைப்பின் 2 நாள் மாநாடு மே 22-ம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில்,  உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக இந்தியாவை சேர்ந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் வரும் 22-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan