10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி

நாடு முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

புதுடெல்லி:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் நிலவி வந்தது.

இந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆசியர்கள், மாணவர்கள் உடல் பரிசோதனை செய்யவேண்டும் எனவும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் நலன் கருதியே ஊரங்கில் இந்த தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan