ஜூன் 1-ம் தேதி இயக்கப்படும் 200 தொடர் வண்டிகளுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்

ஜூன் 1-ம் தேதி இயக்கப்படும் 200 தொடர் வண்டிகளுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்

புதுடெல்லி:

ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து பயணிகள் ரெயில் சேவையை இந்திய ரெயில்வே நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 12-ந்தேதியில் இருந்து சிறப்பு ரெயில்களை மட்டும் இயக்கி வருகிறது. இந்தியாவில் 4-வது கட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதற்கிடையே, ஜூன் 1-ம் தேதியில் இருந்து ஏ.சி. அல்லாத 200 ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் நேற்று அறிவித்தார். 

இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி இயக்கப்பட உள்ள 200 ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்கப்பட உள்ளது என ரெயில்வே அறிவித்துள்ளது. 

Source: Maalaimalar

Author Image
murugan