திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது

திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

சென்னை:

தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார்.

அப்போது அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஆர்.எஸ். பாரதி மீது தேனாம்பேட்டை போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டிற்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை இன்று காலை கைது செய்தனர். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan