இந்தியாவில் ஒரே நாளில் 6654 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 6654 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 125101 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3720 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோப்புப்படம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 125101 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3720 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 125101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6654 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 137 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3720 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 51784 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan