தமிழகத்தில் 4 சிறப்பு தொடர் வண்டிகளை இயக்க அரசு அனுமதி

தமிழகத்தில் 4 சிறப்பு தொடர் வண்டிகளை இயக்க அரசு அனுமதி

தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்களை இயக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பயணிகள் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் கூடுதலாக 2 ஆயிரத்து 600 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என இந்திய ரெயில்வே தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்களை மட்டும் இயக்கிக்கொள்ள ரெயில்வே நிர்வாகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு தமிழக அரசு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இயக்கப்பட உள்ள இந்த 4 சிறப்பு ரெயில்களில் ஏசி வசதி இருக்கக்கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கடிதத்தின் அடிப்படையில் ரெயில்வே நிர்வாகத்திற்கு தெற்கு ரெயில்வே பரிந்துரை வழங்கியுள்ளது.

4 சிறப்பு ரெயில்கள் இயங்க அரசு அனுமதித்துள்ள வழித்தடங்கள்:-

கோவை – மயிலாடுதுறை

விழுப்புரம் – மதுரை

கோவை – காட்பாடி

திருச்சி – நாகர்கோவில் 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan