சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது

சவுதி அரேபியாவில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சிகிச்சை பெறும் நோயாளி

சவுதி அரேபியாவில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ரியாத்:

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,442 பேருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 70,161 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15 பேர் பலியானதை அடுத்து அங்கு பலி எண்ணிக்கை 379 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan