கொரோனா தடுப்பு நடவடிக்கை – இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

கொரோனா தடுப்பு நடவடிக்கை – இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு  உள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் சிறப்பான உரையாடல் நடந்தது. அவரது தலைமையில் இலங்கை கொரோனாவை எதிர்த்து திறம்பட போராடுகிறது. இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு கொரோனாவை எதிர்த்துப் போராடவும், பொருளாதார தாக்கத்தைக் கையாளவும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், மொரீசியஸ் பிரதமருடனும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan