ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் 3 நாள் போர் நிறுத்தம் – தலிபான் அறிவிப்பு

ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் 3 நாள் போர் நிறுத்தம் – தலிபான் அறிவிப்பு

ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று 3 நாள் போர் நிறுத்தத்துக்கு தலிபான் அமைப்பு சம்மதித்துள்ளது.

காபுல் :

ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாம் மார்க்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர்.

இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, ரம்ஜானை முன்னிட்டு, தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்தது. இந்த போர் நிறுத்தத்துக்கு தலிபான் அமைப்புக்கும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 3 நாள் போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக தலிபான் அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan