இரு மாதங்களுக்கு பிறகு சென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கியது

இரு மாதங்களுக்கு பிறகு சென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கியது

சென்னையில் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியது.

சென்னை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. விமானம், ரெயில், பஸ் போக்குவரத்து முடங்கியது. 

இதற்கிடையே, ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதனால் மே 25ம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்நாட்டு விமான சேவை இன்று காலை மீண்டும் தொடங்கியது. சென்னையில் இருந்து டெல்லிக்கு 114 பயணிகளுடன் முதல் விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றது.

இரு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan