பிளஸ்-2 மாணவர்களுக்கு கூடுதலான மதிப்பெண்கள் வழங்கும் தேர்வுத்துறை

பிளஸ்-2 மாணவர்களுக்கு கூடுதலான மதிப்பெண்கள் வழங்கும் தேர்வுத்துறை

பிளஸ்-2 மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. ஊரடங்கு உத்தரவால் விடைத்தாள் திருத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை தவிர பிற பகுதிகளில் நேற்று முதல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

இந்நிலையில் பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தமிழ் வழி மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூறியுள்ளதாவது:- தமிழ் வினாத்தாள் கேள்வி ஒன்றில் புரதம் என்ற தமிழ் சொல்லுக்கு பதிலாக புரோட்டின் என ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்த்து வழங்கியதால் மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் அந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan