ஐந்து மாநிலங்களில் இருந்து விமானங்கள், தொடர் வண்டிகள் வரத்தடை: கர்நாடக அரசு அதிரடி

ஐந்து மாநிலங்களில் இருந்து விமானங்கள், தொடர் வண்டிகள் வரத்தடை: கர்நாடக அரசு அதிரடி

ஐந்து மாநிலங்களில் இருந்து விமானங்கள், ரெயில்கள், மற்ற வாகனங்கள் வர கர்நாடக அரசு அதிரடியாக தடைவிதித்துள்ளது.

இந்தியாவில் 60 நாட்களுக்கு மேல் பொது ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் கொரோனா வைரசின் தொற்று குறைந்த பாடில்லை. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதற்கிடையில் ரெயில்கள் மற்றும் விமானங்கள் சேவை தொடங்கியுள்ளன. இதனால் இந்த மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்லும்போது அந்த மாநிலங்கள் கொரோனா தொற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

சற்று கவனக்குறைவாக இருந்தாலும் கிராமம் வரை வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து விமானங்கள், ரெயில்கள், மற்ற வாகனங்கள் வர தடைவிதிக்கப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கையை கர்நாடகா அரசு எடுத்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan