தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை:

தமிழகத்தில் அமலில் உள்ள 4ம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்கள் பணிகளை தொடங்கி உள்ளன. பொது போக்குவரத்து தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 31-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது தளர்த்தலாமா? என்பது குறித்து கலெக்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

பொது போக்குவரத்து சேவைக்கான சாத்தியக் கூறு இருக்கிறதா? எனவும் கலெக்டர்களிடம் முதலமைச்சர் கருத்துக்களை கேட்டறிந்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan