அரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும் உணரப்பட்டது

அரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும் உணரப்பட்டது

அரியானா மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பயந்து வீட்டைவிட்டு வெளியே ஓடினர்.

அரியானா மாநிலம் ரோதக் என்ற இடத்தில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோதக்கில் இருந்து கிழக்கு – தென்கிழக்கு பகுதியில் 16 கிலோ மீட்டர் தொலைவில் 3.3 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் பக்கத்து மாநிலமான டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அச்சத்தால் வீட்டிலில் இருந்து வெளியே அலறிடித்து ஓடினர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan