144 பேரும் டிஸ்சார்ஜ்: பச்சை மாவட்டமாக மாறிய திருப்பூர்

144 பேரும் டிஸ்சார்ஜ்: பச்சை மாவட்டமாக மாறிய திருப்பூர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 144 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதால் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை மாவட்டமாக இருந்து வந்தது. இந்த நிலையில் அங்கும் கொரோனா கால் பதித்தது. இதையடுத்து 28 நாட்கள் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் ஈரோடு மாவட்டம் இருந்து வந்தது.

இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து வந்த நபரால் அங்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் மிதமாக பாதிக்கப்பட்ட பகுதியாக மாறியது.

இதையடுத்து தமிழகம் பச்சை மாவட்டம் இல்லாத மாநிலமாக மாறியது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டம் பச்சை மாவட்டமாக மாறியது. கடந்த 28 நாட்களாக அங்கு புதிதாகவோ, வெளிமாநிலங்களில் இருந்து வந்த நபர்களுக்கோ கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

நேற்றைய நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 144 பேரும் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழப்புகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan