கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர்

பொதுமக்கள் கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது, சளி, இருமல் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

சென்னை:

சென்னையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால், தொற்று அதிகரித்துள்ளது. தளர்வுகள் அதிகரிக்கும் சூழலில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த தொய்வும் இல்லை.

பொதுமக்கள் கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது. சளி, இருமல் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan