டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்ட தொடர் வண்டி பெட்டிகள் குவிப்பு

டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்ட தொடர் வண்டி பெட்டிகள் குவிப்பு

டெல்லி அரசின் வேண்டுகோளை ஏற்று தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்ட ரெயில் பெட்டிகளை அனுப்பி வைத்துள்ளது ரெயில்வே வாரியம்.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது வரை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இன்றில் இருந்து ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டதால் நோயின் தாக்கம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை தனி்மைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும், நோய் அறிகுறி இல்லாமலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது.

ஏற்கனவே, ரெயில்வே வாரியம் இதற்கென ரெயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்படும் வார்டாக மாற்றி வைத்திருந்தது. தற்போது அந்த ரெயில் பெட்டிகளை டெல்லிக்கு அனுப்பி வைக்க அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி ஏ.சி. அல்லாத 160 படுக்கைகள் கொண்ட 10 பெட்டிகளை தனிப்படுத்துவதற்காகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காக ஏ.சி. வசதி கொண்ட ஒரு பெட்டியையும் ரெயில்வே வாரியம் டெல்லியில் குவித்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக டெல்லி ரெயில் பெட்டிகளை கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan