சென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்

சென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்

சென்னையில் மட்டும் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிசாமி இன்று  பேட்டியளித்தார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

* கொரோனாவை ஒழிக்க அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்றி மக்கள் செயல்பட்டால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்

* தமிழகத்தில் சென்னையில்தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது

* சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பும் அதிகமாக உள்ளது

* தமிழகத்தில் கொரோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு விகிதம் குறைவு

* இந்தியாவிலேயே அதிகம் பேர் குணமடைவது தமிழகத்தில்தான்

* தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது

* சென்னையில் மட்டும் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது

* வட சென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

* அறிகுறி தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும்

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan