கேரளாவில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1412 ஆக அதிகரித்துள்ளது.

இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 26 பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 46 பயணிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கேரளத்தில் 774 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 627 பேர் குணமடைந்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan