பரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் – கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி

பரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் – கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி

மனிதர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

லண்டன்:

லேப்ரடார் மற்றும் காக்கர் ஸ்பேனியல்ஸ் வகையை சேர்ந்த ஆறு நாய்களை லண்டன் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீது வீசும் வாடையை நுகர வைக்கப்படுகின்றன. பின் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் மற்றும் பாதித்தவர்களை நுகர்ந்தே கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ப்ரிட்டன் அரசாங்கம் இதற்கென 5 லட்சம் யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 4,73,53,285 ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை மிக எளிதில், அதிவேகமாக முன்கூட்டியே கண்டறியும் ஆய்வுகளின் அங்கமாக இந்த சோதனை அமைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் நாய்கள், மருத்துவ பரிசோதனை நாய்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சில வகை புற்றுநோய், பார்கின்சன் நோய் மற்றும் மலேரியா போன்றவற்றை நுகர்ந்தே கண்டறிந்து விடும்.

அந்த வகையில் நாய்களுக்கு நோயின் வாடையை நுகர செய்து, பின் இருநீச்சல் குளங்களின் நீரில் ஒரு மேஜை கரண்டி சர்க்கரை கலந்து அவற்றை நுகர செய்ய வைத்து பயிற்சி அளிப்பது பலன் அளிக்கும் என நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் குழு தெரிவித்துள்ளது.

நாய்களால் நிச்சயம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை கண்டறிய முடியும் என்றும் இந்த ஆய்வின் இரண்டாம் கட்ட பயிற்சிகளில் கொரோனா பாதித்தவர்களை நாய்களை கொண்டு நுகர செய்து சோதனை செய்யப்பட இருக்கிறது. இதன் முடிவுகளை கொண்டு மேலும் சில நாய்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்பட உள்ளது.

சோதனைகள் வெற்றியடையும் பட்சத்தில், ஒவ்வொரு நாயும் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 250 பேரை நுகர்ந்தே அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்துவிட முடியும்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan