மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி:

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், மருத்துவ படிப்புக்கான இடங்களில்  50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். ஓபிசி, பிசி மற்றும் எம்பிசி ஆகிய பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். நடப்பாண்டில் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய தொகுப்பில் 27 சதவீத இடத்தை ஓபிசி பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளது.

இதேபோல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத அகில இந்திய இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan