காணொளி கால் ஆலோசனையின்போது அரை நிர்வாணமாக தோன்றிய மெக்சிகோ பெண் செனட்டர்

காணொளி கால் ஆலோசனையின்போது அரை நிர்வாணமாக தோன்றிய மெக்சிகோ பெண் செனட்டர்

மெக்சிகோவைச் சேர்ந்த பெண் செனக்டர் வீடியோ கால் ஆலோசனையின்போது அரை நிர்வாணமாக தோன்றிய காட்சி வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. அரசு அலுவலகங்கள் இயங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. தற்போது தென்அமெரிக்கா நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமான அளவில் உள்ளது.

இதனால் அரசு அதிகாரிகள் ஜூம் வீடியோ கால் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மெக்சிகோ பெண் செனட்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தயாராக இருந்தபோது அவருடைய அரை நிர்வாணப்படம் வெளியானது. இதை சக செனட்டர்கள் கவனித்து அவரிடம் தெரிவிக்க, அந்த செனட்டர் உடனனே சரி செய்து கொண்டார்.

66 வயதான அந்த பெண் செனட்டர் மர்தா லூசியா மிச்செர் இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதுடன், விளக்கக் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ‘‘சக செனட்டர்களுடன் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலை குறித்து முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் துரதிருஷ்டவசமாக இந்த சம்பவம் நடைபெற்று விட்டது.

அந்த கூட்டத்தின் ஒரு பகுதியில் கம்ப்யூட்டரின் கேமரா ஆனில் இருந்ததை கவனிக்காமல் நான் எனது உடையை மாற்றிக் கொண்டேன். அதன்பின் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றேன். என்னுடைய பிழையை நான் உணர்ந்தேன். எனக்கு அந்த சமயத்தில் உதவிய சக செனட்டர்கள் அலேஜான்ட்ரோ அர்மென்ட்ரா மியர் மற்றும் ஓவிடியோ பெரால்டா சுவாரஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இப்படம் வெளியானது குறித்து பலவிதமான கருத்துக்கள் வெளியானது. அதற்கு மர்தா லூசியா மிச்செர் பதில் அளிக்கையில் ‘‘நான் மாலு மிச்செர். தற்செயலாக என்னுடைய உடலை காட்டிய இந்த சம்பவத்திற்கான நான் அவமானப்படப் போவதில்லை. ஏனென்றால், அது பெண்களின் சாதாரண மற்றொரு உறுப்பு போன்றதுதான். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களில் நான் எதிர்த்து போராடியுள்ளேன்.

எனக்கு தற்போது 66 வயதாகிறது. நான்கு குழந்தைகளுக்க பாலூட்டியுள்ளேன். தற்போது மூன்று பேர் தொழில் செய்து வருவதுடன் பொறுப்புள்ள ஆண்களாக இருக்கிறார்கள். எனது உடல் அவர்களுக்கு ஊட்டமளித்ததற்காக பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan