ஸ்பைஸ்ஜெட் விமானியை கத்தியால் குத்தி கொள்ளையடித்த கும்பல்- டெல்லியில் துணிகரம்

ஸ்பைஸ்ஜெட் விமானியை கத்தியால் குத்தி கொள்ளையடித்த கும்பல்- டெல்லியில் துணிகரம்

டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானியை கத்தியால் குத்தியும் துப்பாக்கியை காட்டி மிரட்டியும் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி:

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றி வரும் யுவராஜ் திவேதியா என்பவர், பரிதாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று இரவு விமான நிலையத்திற்கு காரில் வந்துகொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் டெல்லி ஐஐடி அருகே உள்ள மேம்பாலத்தில் வந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 நபர்கள் கொண்ட கும்பல் அவரது காரை வழிமறித்துள்ளது.

காரை நிறுத்தியதும், அந்த கும்பல் கார் கண்ணாடியை உடைத்து, யுவராஜை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். துப்பாக்கியை காட்டி  மிரட்டி அவரிடம் இருந்த 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் அவரது உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுபற்றி யுவராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஐஐடி அருகே இதுபோன்று பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan