அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19.5 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19.5 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

வாஷிங்டன்:

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 68.25 லட்சத்தை நெருங்குகிறது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.97    லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.   

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்து 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து11 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து 7 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan