கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் – முதல்வர் பழனிசாமி உரை

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் – முதல்வர் பழனிசாமி உரை

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

* பொதுமுடக்கம் அறிவித்ததில் இருந்து வீட்டிற்குள்ளேயே இருந்து ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு பாராட்டு

* டாக்டர்கள் உள்பட முன்கள பணியாளர்களின் பணிகள் அளப்பரியது

* கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகம் கிடையாது

* இயல்பு வாழ்க்கையுடன் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.

* புயல் மற்றும் சுனாமியை பாதிப்பை சிறப்பாக எதிர்கொண்டோம்.

* கொரோனா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

* தினசரி 13 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன

* பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லை

* குணமடைவோர் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம்

* பயிர்க்கடன், கூட்டுறவுக்கடன்களை கட்ட காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது

* 35.65 தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது

* மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை எனில் கொரோனவை கட்டுப்படுத்துவது சாத்தியம் இல்லை.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan