அதிரும் மகாராஷ்டிரா – கொரோனாவுக்கு அதிகாரிகள் உள்பட 33 காவல் துறையினர் பலி

அதிரும் மகாராஷ்டிரா – கொரோனாவுக்கு அதிகாரிகள் உள்பட 33 காவல் துறையினர் பலி

மகாராஷ்டிராவில் அதிகாரிகள் உள்பட 33 போலீசார் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

மும்பை:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது.
அங்கு சுமார் 83 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது.

கொரோனா வைரசின் தாக்கம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரையும் விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் அதிகாரிகள் உள்பட 33 போலீசார் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,562 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா ஒருபுறம் காவல்துறையினர்  மீது தாக்குதல் நடத்திவரும் வேளையில், ஊரடங்கை கடைப்பிடிக்க வலியுறுத்தும்போது பொதுமக்களும் போலீசாரை தாக்கும் சம்பவமும் அங்கு தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

ஊரடங்கு காலத்தில் மட்டும் 260 போலீசார் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 86 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய 841 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan