அதிரும் அமெரிக்கா – கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது

அதிரும் அமெரிக்கா – கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

வாஷிங்டன்:

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.   

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் இன்று புதிதாக 6,658 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 20,14,107 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு மேலும் 176 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 1,12,645  ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவில், கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 7,63,303 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan