கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல்

கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல்

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளன.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் போதுமான அளவில் இல்லை என புகார் வந்தது.

இதனையடுத்து படுக்கைகளை அதிகரிப்பது பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 400 தனியார் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் தனியார் மருத்துவமனைகள் படுக்கை வசதிகளை அதிகரிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள படுக்கைகள் வசதி விவரத்தை stopcorona.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளன. 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan