பிரேசிலை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு

பிரேசிலை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு

பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.42  லட்சத்தைக் கடந்துள்ளது.

பிரேசிலில் கொரோனாவுக்கு 1,185 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 500- ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan