கண்ணம்மாபேட்டையில் ஜெ.அன்பழகன் உடல் நல்லடக்கம்

கண்ணம்மாபேட்டையில் ஜெ.அன்பழகன் உடல் நல்லடக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் கண்ணம்மாபேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை:

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் இன்று காலை 8.05 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து சுமார் 12.15 மணியளவில் மருத்துவமனையில் இருந்து ஜெ.அன்பழகன் உடல் நேராக சென்னை தி.நகரில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. வீட்டிற்கு வெளியே சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள்  அஞ்சலி செலுத்தினர். பின்னர் கண்ணம்மாபேட்டையில் உள்ள மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு ஜெ.அன்பழகனின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது தந்தை ஜெயராமன் கல்லறை அருகே 15 அடி ஆழம் குழி தோண்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜெ.அன்பழகனின் உருவ படத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிஆர் பாலு, டிகேஎஸ் இளங்கோவன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan