இஸ்ரோவின் ஆளில்லா விண்கலம் அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு

இஸ்ரோவின் ஆளில்லா விண்கலம் அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2022ல் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக இந்த அணடுக்குள் ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. அதில் ஒரு ரோபோவும் அனுப்பி வைக்கப்பட இருந்தது.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக ககன்யான் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆளில்லா விண்கலம் அனுப்பம் திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த ஆண்டு இறுதி அல்லது தொடக்கத்தில் செயல்படுத்துவதாக இருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ரஷியாவில் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் பயிற்சியும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan