1,10,080 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை: ஒடிசா முதல்வர் அறிவிப்பு

1,10,080 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை: ஒடிசா முதல்வர் அறிவிப்பு

வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாநிலம் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

மே 1-ந்தேதியில் இருந்து அவர்கள் சொந்த மாநிலம் திரும்ப சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது. சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த மாநிலம் திரும்பும் தொழிலாளர்கள் மூலம் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் பெரும்பாலான மாநிலங்கள் எல்லையில் முகாம் அமைத்து அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தியது.

ஒடிசா மாநில அரசும்  அப்படி தொழிலாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தியது. பின்னர் சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்திய புலம்பெயர் தொழிலாளர்கள் 1,10,080 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இதற்கான 19.03 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan