வங்காளதேசத்தில் 3187 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்தது

வங்காளதேசத்தில் 3187 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்தது

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 3187 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

டாக்கா:

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.21 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 3,187 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 78,052 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 37  பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,049 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan