தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது

தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது

மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,984 ஆக அதிகரித்துள்ளது.

மும்பை:

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 98 ஆயிரத்தை நெருங்குகிறது.

உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்க உள்ளது.

இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,984 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 75 ஆக உள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan