எல்லையில் மோதல்- பாகிஸ்தான் நிலைகளை தகர்த்த இந்திய ராணுவம்

எல்லையில் மோதல்- பாகிஸ்தான் நிலைகளை தகர்த்த இந்திய ராணுவம்

எல்லைப்பகுதியில் கடந்த சில தினங்களாக நடந்து வரும் மோதலில், பாகிஸ்தான் நிலைகளை தகர்த்திருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. கடந்த சில தினங்களாக இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் எல்லைப்பகுதியில் எப்போதும் இந்திய ராணுவம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

புதன்கிழமை இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. சிறிய ரக மற்றும் கனரக ஆயதங்கள், மோர்ட்டார் ரக குண்டுகள் மூலம்  தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி முழுவதும் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் துல்லியமான மற்றும் வலுவான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ரஜோரி செக்டாரில் பாகிஸ்தான் நிலைகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan