டெல்லியில் உச்சக்கட்டம்: கடந்த 24 மணி நேரத்தில் 5947 பரிசோதனை-  கொரோனா பாதிப்பு 2137

டெல்லியில் உச்சக்கட்டம்: கடந்த 24 மணி நேரத்தில் 5947 பரிசோதனை- கொரோனா பாதிப்பு 2137

டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 2137 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில், தமிழகத்தில் 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று ஒரே நாளில் 2137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 71 பேர் உயிரிழந்துள்ளர்.

டெல்லியில் இதுவரை கொரோனாவுக்கு 36,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 667 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் மொத்தம் 13,398 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 5947 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 212 கட்டுப்படுத்திய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் சுமார் 35 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan