அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கொரோனா தொற்று

அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கொரோனா தொற்று

முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான சாகித் அப்ரிடி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த அவர், வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், என் உடல் மோசமாக வலியை ஏற்படுத்தியது எனவும் தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாக தான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ள அவர்,  ரைவஸ் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வர பிரார்த்தனை தேவை. இன்ஷா அல்லாஹ் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அப்ரிடிக்கு அடுத்ததாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கிலானியின் மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

67 வயதான கிலானி ஊழல் வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜரான பிறகு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில், “இம்ரான் அரசுக்கும், பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் கழகத்திற்கும் (NAB) நன்றி. நீங்கள் வெற்றிகரமாக எனது தந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan