டெல்லியை உலுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்தை நெருங்குகிறது

டெல்லியை உலுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்தை நெருங்குகிறது

தலைநகர் டெல்லியில் 2134 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்தை நெருங்குகிறது.

புதுடெல்லி:

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மேலும் 2,134 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38,958 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,945 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு 1,271பேர் பலியாகி உள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan