ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.12.40 கோடி அபராதம் வசூல்

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.12.40 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய நபர்களிடம் இருந்து 12.40 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் 144 தடை உத்தரவு அமலில்தான் உள்ளது.

இதனால் தேவையில்லாமல் வாகனத்தில் வெளியே செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். கைது நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர்.

அதன்படி தற்போது வரை 12.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,33,005 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாவும், 4,69,228 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan