எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்திய வீரர் ஒருவர் பலி- இருவர் காயம்

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்திய வீரர் ஒருவர் பலி- இருவர் காயம்

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்திய ராணுவ வீரர்களும், எல்லை அருகே உள்ள அப்பாவி மக்களும் உயிரிழக்கும் துயர சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. மேலும் கொத்துக்குண்டுகளை (Shelling) வீசியும் தாக்குதல் நடத்தியது. இதில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் ஒரு வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்த கிராமத்தின் சேதம் குறித்து தெரியவில்லை.

ஏற்கனவே கடந்த 4-ந்தேதி ரஜோரி மாவட்டம் சுந்தர்பெனி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan