சீனாவில் திரவ எரிவாயு டேங்கர் பார வண்டி வெடித்த விபத்தில் 19 பேர் பலி: 166 பேர் காயம்

சீனாவில் திரவ எரிவாயு டேங்கர் பார வண்டி வெடித்த விபத்தில் 19 பேர் பலி: 166 பேர் காயம்

சீனாவில் திரவ எரிவாயு டேங்கர் வெடித்த விபத்தில் அருகில் உள்ள வீடுகள், ஒர்க்ஸ்ஷாப் பாதிக்கப்பட்டு 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனா டேங்கர் லாரி விபத்து

சீனாவில் திரவ எரிவாயு டேங்கர் வெடித்த விபத்தில் அருகில் உள்ள வீடுகள், ஒர்க்ஸ்ஷாப் பாதிக்கப்பட்டு 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனாவின் ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் – கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் திரவ எரிவாயு ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது. விபத்து ஏற்பட்டதும் டேங்கர் லாரி அருகில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலை ஒர்க்ஸ்ஷாப் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த இடங்கள் இடிந்து விழுந்ததுடன் தீப்பிடித்து எரிந்தன.

50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் மீட்பு பணியில் ஈடுபட்டன. இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 166 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தின் போது சாலையில் சென்ற வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

Source: Maalaimalar

Author Image
murugan