தெலுங்கானாவில் ஒரே நாளில் 23 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா

தெலுங்கானாவில் ஒரே நாளில் 23 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா

தெலுங்கானாவில் ஒரே நாளில் 23 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெயயப்பட்டு உள்ளது என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ஐதராபாத்:

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் இந்த வைரசின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. நோய் பாதிப்புகளை குறைக்க மாநில அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 737 ஆக உள்ளது.
182 பேர் கொரோனாவால் பலியாகினர்.

இந்நிலையில், ஒரே நாளில் 23 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார் என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan