ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை

ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 14 வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும்17-ம் தேதி பிரதமருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஆலோசனை  நடைபெற உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan