1000 ரூபாயை வீட்டிற்கே சென்று வழங்க முதலமைச்சர் உத்தரவு

1000 ரூபாயை வீட்டிற்கே சென்று வழங்க முதலமைச்சர் உத்தரவு

4 மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் 12 நாட்கள் ஊரடங்கிற்கான நிவாரண நிதியான ஆயிரம் ரூபாயை வீட்டிற்கே சென்று வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வருகிற 19-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 12 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ரேசன் குடும்ப அட்டைக்காரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண தொகையான ஆயிரம் ரூபாயை வருகிற 22-ந்தேதி முதல் ரேசன் குடும்ப அட்டைத்தாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan