எல்லையில் சீன ராணுவம் தாக்குதல்- தமிழக வீரர் வீரமரணம்

எல்லையில் சீன ராணுவம் தாக்குதல்- தமிழக வீரர் வீரமரணம்

எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

சென்னை:

இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்குமிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பழனியும் (வயது 40) ஒருவர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி, கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

மோதலைத் தொடர்ந்து எல்லைப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan