லடாக் மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் பலி: ராணுவ வட்டாரங்கள் தகவல்

லடாக் மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் பலி: ராணுவ வட்டாரங்கள் தகவல்

லடாக் மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரர்கள் மரணம் அடைந்ததாகவும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்குமிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்டாக தெரியவந்தது.

இந்நிலையில் இந்திய தரப்பில் 20 பேர் பலியாகியிருப்பதாவும், எண்ணிக்கை இன்னும் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில் சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan