26 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீட்பு – மாவட்ட வாரியாக விவரம்

26 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீட்பு – மாவட்ட வாரியாக விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் இதுவரை 26 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,515 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 706 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 26 ஆயிரத்து 782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 1,438 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் – 372

செங்கல்பட்டு – 1,501

சென்னை – 18,565

கோவை – 150

கடலூர் – 456

தர்மபுரி – 11

திண்டுக்கல் – 177

ஈரோடு – 70

கள்ளக்குறிச்சி – 262

காஞ்சிபுரம் – 440

கன்னியாகுமரி – 80

கரூர் – 85

கிருஷ்ணகிரி – 22 

மதுரை – 301

நாகை – 59

நாமக்கல் – 81

நீலகிரி – 14

பெரம்பலூர் – 141

புதுக்கோட்டை – 29

ராமநாதபுரம் – 86

ராணிப்பேட்டை – 113

சேலம் – 190

சிவகங்கை – 41

தென்காசி – 93

தஞ்சாவூர் – 106

தேனி – 115

திருப்பத்தூர் – 37

திருவள்ளூர் – 914

திருவண்ணாமலை – 459

திருவாரூர் – 58

தூத்துக்குடி – 306

திருநெல்வேலி – 379

திருப்பூர் – 115

திருச்சி – 118

வேலூர் – 56

விழுப்புரம் – 371

விருதுநகர் – 142

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 82

உள்நாடு – 35

ரெயில் நிலைய கண்காணிப்பு – 150

மொத்தம் – 26,782

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan