கொரோனாநச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வீக் ஆகிடுச்சி – மிகுதியாகப் பகிரப்படும் உலக சுகாதார மையத்தின் ஆய்வு

கொரோனாநச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வீக் ஆகிடுச்சி – மிகுதியாகப் பகிரப்படும் உலக சுகாதார மையத்தின் ஆய்வு

கொரோனாவைரஸ் வீக் ஆகிவிட்டதாக கூறும் உலக சுகாதார மையத்தின் ஆய்வு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனாவைரஸ் பாதிப்பின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார மையத்தின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வைரல் தகவல்களில், கொரோனாவைரஸ் தீவிரம் குறைந்து வருகிறது. உலக சுகாதார மையம் மற்றும் பல்வேறு முன்னணி மருத்துவமனைகள் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனாவைரஸ் பாதிப்பின் தன்மை குறைந்து வருகிறது. சமீபத்தில் கொரோனாவைரஸ் பாதிப்பில் சிக்கியர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. வைரல் தகவலுடன் உலக சுகாதார மையத்தில் ட்விட்டர் பதிவு ஸ்கிரீன்ஷாட் இணைக்கப்பட்டு இருக்கிறது.  

ஆய்வில் வைரல் தகவல்களில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. முன்னதாக இத்தாலி நாட்டு மருத்துவர் கொரோனாவைரஸ் தீவிரம் குறைந்து வருவதாக தெரிவித்தார். எனினும், உலக சுகாதார மையம் இதனை நிராகரித்துவிட்டது. மேலும் கொரோனாவைரஸ் உயிரை பறிக்கும் நோய் என தெரிவித்தது. 

இதுதவிர கொரோனாவைரஸ் தீவிரம் குறைந்துள்ளது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டு உள்ள புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளதும் தெளிவாக தெரிகிறது. அந்தவகையில் வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan